கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி: முதல் சுற்றில் குகேஷ் வெற்றி

டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகதி பெறுவார்கள்.
சமர்கண்ட்,
‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஓவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகதி பெறுவார்கள்.
இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஓபன் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், எடினி பாக்ரோட்டை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஆடிய குகேஷ் 45-வது நகர்த்தலில் பாக்ரோட்டை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கினார். மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா 31-வது நகர்த்தலில் அமெரிக்காவின் ஜெப்ரி ஜியோங்குடன் ‘டிரா’ செய்தார்.
இதன் பெண்கள் பிரிவு முதல் சுற்றில் தமிழக வீராங்கனை ஆர். வைஷாலி 56-வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் குல்ருக்பெகிமை வென்றார்.
இதே போல் இந்தியாவின் வந்திகா அகர்வால், யூலியா ஒஸ்மாக்கை (உக்ரைன்) வீழ்த்தினார். ஹரிகா (இந்தியா)- மார்செல் எப்ரோம்ஸ்கி (இஸ்ரேல்) இடையிலான ஆட்டம் டிரா ஆனது.