கிராண்ட் சுவிஸ் செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி


கிராண்ட் சுவிஸ் செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
x

டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

சமர்கண்ட்,

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் ஓபன் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் இவான் ஜெம்லியான்ஸ்கியை சந்தித்தார். வெள்ளைநிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 33-வது நகர்த்தலில் ஜெம்லியான்ஸ்கியை சாய்த்து முதல் வெற்றியை பெற்றார். அவர் முதல் சுற்றில் டிரா கண்டிருந்தார்.

இதன் பெண்கள் பிரிவில் 2-வது சுற்றில் கருப்புநிற காய்களுடன் ஆடிய தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி 22-வது நகர்த்தலில் நெதர்லாந்தின் எலினி ரோபர்சை எளிதில் தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தார்.

1 More update

Next Story