சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்


சென்னையில்  கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 25 April 2025 2:15 AM IST (Updated: 25 April 2025 2:16 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சி முகாம் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

12, 13 வயது பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இந்த பயிற்சி முகாம் 15 நாட்கள் தினசரி மாலை 4 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கான தேர்வு போட்டி நாளை மறுநாள் (27-ந் தேதி) காலை 8 மணிக்கு நடைபெறும் என்றும் தகுந்த வயது சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story