சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்


சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 23 April 2025 2:15 AM IST (Updated: 23 April 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

முகாம் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் டீ சர்ட் வழங்கப்படும்.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கிளப் சார்பில் 41-வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஒரு மாதம் தினசரி காலை 6.30 முதல் 8.30 மணி வரை பயிற்சி நடைபெறும். இதில் 12 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் ஆடிய அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர், வீராங்கனைகள் பயிற்சி அளிக்கிறார்கள். பயிற்சியின் போது மாணவ- மாணவிகளுக்கு சத்தான உணவுகள் அளிக்கப்படும். முகாம் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் டீ சர்ட் வழங்கப்படும்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் உள்ள நெல்லை பிரண்ட்ஸ் கைப்பந்து கிளப்பை தொடர்பு கொள்ளலாம் என்று செயலாளர் பி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story