பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி - சென்னையில் நடக்கிறது


பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி - சென்னையில் நடக்கிறது
x

கோப்புப்படம்

தினத்தந்தி 30 July 2025 6:30 AM IST (Updated: 30 July 2025 6:30 AM IST)
t-max-icont-min-icon

7-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி குழும பள்ளிகள் ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான 7-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி அணிகள் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் உள்ள சென்னை மாவட்ட கைப்பந்து சங்க அலுவலகத்திலோ அல்லது chennaidistrictvolleyballassn@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவோ தங்களது பெயர்களை வருகிற 6-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story