உலகக் கோப்பை குத்துச்சண்டை: 8 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


உலகக் கோப்பை குத்துச்சண்டை: 8 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் 3-வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் அருந்ததி சவுத்ரி உலக போட்டியில் 3 பதக்கம் வென்றவரான ஜெர்மனியின் லியோனி முல்லரை சந்தித்தார். அருந்ததியின் சரமாரியான குத்துகளை எதிர்கொள்ள முடியாமல் லியோனி நிலைகுலைந்தார். இதையடுத்து ஆட்டத்தை பாதியில் நிறுத்திய நடுவர் அருந்ததி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 23 வயதான அருந்ததிக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

உலக சாம்பியனான இந்தியாவின் மீனாட்சி 48 கிலோ உடல் எடைப் பிரிவில் 5-0 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் பேக் சோரோங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அங்குஷ் பன்ஹால் (80கிலோ), நுபுர் (80 கிலோவுக்கு மேல்), பர்வீன் ஹூடா (60 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ), அபினாஷ் (65 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோ) ஆகிய இந்தியர்களும் இறுதி சுற்றை எட்டினர்.

1 More update

Next Story