21-ந்தேதி இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்

2025-2029-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக இடைக்கால கமிட்டி தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த பிப்ரவரி 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல், பல்வேறு மேல்முறையீடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தள்ளிக்கொண்டே போனது. குத்துச்சண்டை சம்மேளனத்தின் அன்றாட பணிகளை இடைக்கால கமிட்டி கவனித்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு இந்திய குத்துச்சண்டை சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகிற 21-ந்தேதி டெல்லியில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் குத்துச்சண்டை சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் 2025-2029-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக இடைக்கால கமிட்டி தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story