ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன்


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன்
x

image courtesy:PTI

லக்‌ஷயா சென் இறுதிப்போட்டியில் யுஷி தனகா உடன் மோதினார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 26-வது இடம் வகிக்கும் ஜப்பான் வீரர் யுஷி தனகா உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்‌ஷயா சென் 21 - 15 மற்றும் 21-11 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

1 More update

Next Story