ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: சென்னையில் தொடங்கியது


ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி:  சென்னையில் தொடங்கியது
x

4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை,

23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் (35 வயதுக்கு மேற்பட்டோர்) பங்கேற்றுள்ளனர்.

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்த போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா மற்றும் தடகள சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story