ஆசிய தடகள போட்டி: இந்திய அணியில் 9 தமிழக வீரர், வீராங்கனைகள்

இந்திய தடகள அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் அடுத்த மாதம் (மே) 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய தடகள அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து வீரர்கள் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), செர்வின் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), தமிழரசு, ராகுல் குமார் (இருவரும் 100 மீட்டர் தொடர் ஓட்டம்), விஷால், சந்தோஷ் குமார் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ் (400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம்), அபிநயா ராஜராஜன், சுபா வெங்கடேசன் (400 மீட்டர் தொடர் ஓட்டம்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
Related Tags :
Next Story