மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சலிமா டெட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நவம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி,
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நவம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகள் பீகாரில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜ்கிர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக சலிமா டெட் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவ்நீத் கவுர் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி நவம்பர் 11-ந் தேதி நடக்கிறது.18 பேர் கொண்ட இந்திய அணி விவரம்,
கோல்கீப்பர்கள்: சவிதா, பிச்சு தேவி கரிபம்
டிபெண்டர்கள்: உதிதா, ஜோதி, வைஷ்ணவி விட்டல் பால்கே, சுசீலா சானு புக்ரம்பம், இஷிகா சவுத்ரி.
மிட் பீல்டர்கள்: நேஹா, சலிமா டெடே, ஷர்மிளா தேவி, மனிஷா சவுகான், சுனெலிடா டோப்போ, லால்ரெம்சியாமி.
முன்கள வீரர்கள்: நவ்நீத் கவுர், ப்ரீத்தி துபே, சங்கீதா குமாரி, தீபிகா, பியூட்டி டங்டங்.