ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 3-வது வெற்றி


ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 3-வது வெற்றி
x

image courtesy: Hockey India twitter

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - கோனாசிகா அணிகள் மோதின.

ரூர்கேலா,

6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த பரபரப்பான 15-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - கோனாசிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணியை வீழ்த்தியது.

4-வது லீக்கில் ஆடிய தமிழ்நாடு அணிக்கு இது 3-வது வெற்றியாகும். தமிழ்நாடு அணியில் ஜிப் ஜேன்சென் 3 கோலும், கார்த்தி செல்வம், சுதேவ், நாதன் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத் டூபான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராஸ் அணியை பந்தாடியது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் - கோனாசிகா அணிகள் சந்திக்கின்றன.


Next Story