ஆக்கி இந்தியா லீக்: கலிங்கா லான்சர்ஸ் அணி தொடர்ந்து 2-வது வெற்றி


ஆக்கி இந்தியா லீக்: கலிங்கா லான்சர்ஸ் அணி தொடர்ந்து 2-வது வெற்றி
x

image courtesy: twitter/@HockeyIndiaLeag

தினத்தந்தி 10 Jan 2025 2:31 PM IST (Updated: 10 Jan 2025 3:19 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ்-தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரூர்கேலா,

6-வது ஆக்கி இந்தியா லீக் தொடர் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ், கோனாசிகா அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதியில் கலிங்கா லான்சர்ஸ் அணி மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் வெற்றி பெற்றது. வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். கலிங்கா லான்சர்ஸ் அணி தரப்பில் அன்டோயின் கினா மற்றும் அரன் ஜலேவ்ஸ்கி தலா ஒரு கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினார். கோனாசிகா தரப்பில் சுனில் மட்டும் ஒரு கோல் அடித்தார்.

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ்-தமிழ்நாடு டிராகன்ஸ் (இரவு 8.15 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story