ஆக்கி இந்தியா லீக்: டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் அணியை ஊதித்தள்ளிய கலிங்கா லான்சர்ஸ்
6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது.
ரூர்கேலா,
6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கலிங்கா லான்சர்ஸ் அடுத்தடுத்து கோல்கள் அடித்தது.
இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் 5-1 என்ற கோல் கணக்கில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் அணியை ஊதித்தள்ளியது.
வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் தரப்பில் பிரிங்க்மேன் 2 கோல்களும், நிக்கோலஸ், ஆர்தர் வான் டோரன் மற்றும் குர்சாஹிப்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். டெல்லி தரப்பில் கோரி வெயர் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
Related Tags :
Next Story