மகளிர் ஐரோப்பிய கால்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து இன்று மோதல்

கோப்புப்படம்
14-வது மகளிர் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
பாசெல்,
14-வது மகளிர் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் உலக சாம்பியன் ஸ்பெயினும், நடப்பு ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இவர்களில் யாருக்கு மகுடம் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பாசெல் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது. 2023-ம்ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் இங்கிலாந்து 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. அதற்கு பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் ஐரோப்பிய கோப்பையை முதல்முறையாக கையில் ஏந்துவதற்கு அரின் பாரெடஸ் தலைமையிலான ஸ்பெயின் மங்கைகள் வியூகங்களை தீட்டுகிறார்கள். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.