மகளிர் ஐரோப்பிய கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த மொத்த பரிசுத்தொகை எவ்வளவு..?

image courtesy:twitter/@WEURO2025
மகளிர் ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
பாசெல்,
16 அணிகள் பங்கேற்ற 14-வது பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு பாசெல் நகரில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான 90 நிமிடங்களில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் எதுவும் விழவில்லை.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி போட்டி கட்டணம், லீக் வெற்றி, கோப்பைக்கான பரிசு என மொத்தம் ரூ.50½ கோடியை அள்ளியது.