மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தகுதிசுற்று: தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா

image courtesy: @IndianFootball
இந்தியா தரப்பில் சங்கீ தா பாஸ்போர் 2 கோல்கள் (29-வது, 74-வது நிமிடம்) அடித்தார்.
சியாங் மாய்,
அடுத்த ஆண்டு (2026) ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 21-வது மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்தை சந்தித்தது.
சியாங் மாய் நகரில் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 46-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை வீழ்த்தி ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா தரப்பில் சங்கீ தா பாஸ்போர் 2 கோல்கள் (29-வது, 74-வது நிமிடம்) அடித்தார்.
Related Tags :
Next Story