பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: 'சி' பிரிவில் இந்தியா

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வியட்நாமை எதிர்கொள்கிறது
புதுடெல்லி,
21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடம் பெறும் சிறந்த 2 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இதற்கான போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய பெண்கள் அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. முன்னாள் சாம்பியன்கள் வியட்நாம், சீனதைபே மற்றும் ஜப்பான் இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வியட்நாமை மார்ச் 4-ந் தேதி எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து 7-ந் தேதி ஜப்பானையும், 10-ந் தேதி சீனதைபேவையும் சந்திக்கிறது.
Related Tags :
Next Story