மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா? - தாய்லாந்து அணியுடன் இன்று மோதல்


மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா? - தாய்லாந்து அணியுடன் இன்று மோதல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 July 2025 10:00 AM IST (Updated: 5 July 2025 10:01 AM IST)
t-max-icont-min-icon

21-வது மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

சியாங் மாய்,

21-வது மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 34 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

இதன் 'பி' பிரிவு ஆட்டங்கள் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தாய்லாந்து அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முறையே முதல் இரு இடங்கள் வகிக்கின்றன. இந்த நிலையில் சியாங் மாய் நகரில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி ஆசிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும். தரவரிசையில் 70-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 46-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை இதுவரை வீழ்த்தியதில்லை. மேலும் தகுதி சுற்று மூலமாக முன்னேறியது கிடையாது. எனவே வலுவான தாய்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1 More update

Next Story