புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி


புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ்  வெற்றி
x
தினத்தந்தி 5 Sept 2025 6:41 AM IST (Updated: 5 Sept 2025 2:15 PM IST)
t-max-icont-min-icon

புனேரி பால்டன்- தபாங் டெல்லி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 28-28 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது

விசாகப்பட்டினம்,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

புனேரி பால்டன்- தபாங் டெல்லி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 28-28 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட ஷூட்-அவுட்டிலும் 5-5 என சமநிலை நீடித்ததால், கோல்டன் ரைடு முறை அமலுக்கு வந்தது. இதில் டெல்லி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் புனேயை வீழ்த்தியது. 4-வது லீக்கில் ஆடிய புனேக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டங்களில் யு மும்பா- பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story