நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: தஜிகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா


நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: தஜிகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
x

image courtesy:twitter/@IndianFootball

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது.

துஷான்பே,

8 அணிகள் பங்கேற்றுள்ள நேஷன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானில் நேற்று தொடங்கியது. இதில்‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தஜிகிஸ்தானுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தஜிகிஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்தியா தரப்பில் அன்வர் அலி மற்றும் சந்தேஷ் ஜிங்கன் தலா ஒரு கோல் அடித்தனர். தஜிகிஸ்தான் தரப்பில் ஷாரோம் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

1 More update

Next Story