நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டம் டிரா


நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டம் டிரா
x

image courtesy:twitter/@IndianFootball

இந்திய அணி அடுத்து 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாட உள்ளது.

துஷான்பே,

மத்திய ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி கண்டிருந்தது. இதனையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டம் கோலின்றி (0-0) டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணி தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்தது. ஈரான் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா அடுத்து 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாட உள்ளது.

1 More update

Next Story