லா லிகா லீக்: பார்சிலோனாவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் திரில் வெற்றி

Image Courtesy: @realmadrid
லா லிகா லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
மாட்ரிட்,
லா லிகா லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது.
ரியல் மாட்ரிட் அணி சார்பில் கைலியன் எம்பாப்பே ஒரு கோலும், பெல்லிங்காம் ஒரு கோலும் அடித்தார். பார்சிலோனா அணிக்காக லோபஸ் ஒரு கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் 10 ஆட்டங்களில் 9 வெற்றியை பெற்றுள்ளது ரியல் மாட்ரிட் அணி. 27 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யாமல் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story






