ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி 4-வது வெற்றி


ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி 4-வது வெற்றி
x

image courtesy:twitter/@IndianFootball

இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் பூட்டானுடன் நேற்று மோதியது.

திம்பு

7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இதில் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே நேபாளம் வங்காளதேசம் மற்றும் பூட்டானை வீழ்த்தி வெற்றி கண்டிருந்தது. இந்த சூழலில் இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் மீண்டும் பூட்டானுடன் நேற்று மோதியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் பூட்டானை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி அடுத்து நேபாளத்தை நாளை சந்திக்கிறது.

1 More update

Next Story