ஜூனியர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணி

இதில் பங்கேற்ற 4 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின.
திம்பு,
7-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நடந்தது. இதில் பங்கேற்ற 4 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின.
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று வங்காளதேசத்திடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. வங்காளதேச அணியில் பூர்ணிமா மர்மா (முதல் நிமிடம்), அல்பி அக்தர் (34-வது நிமிடம்), சவுரவி அகண்டா பிரீத்தி (49-வது நிமிடம்), மமோனி சக்மா (90-வது நிமிடம்) ஆகியோரும், இந்திய அணியில் அனுஷ்கா குமாரி (9-வது நிமிடம்), பிரித்திகா பர்மன் (65-வது நிமிடம்), ஜூலன் நோங்மைதெமும் (89-வது நிமிடம்) கோல் அடித்தனர். கடைசி லீக்கில் தோல்வியை தழுவினாலும் இந்திய அணி ஏற்கனவே முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்ததால் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கியது.