ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி : மோகன் பகான்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி :  மோகன் பகான்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்
x

இறுதிப்போட்டி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

கொல்கத்தா,

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி தொடங்கியது. 13 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்களான மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்பேட்டிக்குள் கால்பதித்தன. இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த மோகன் பகான் அணி அரையிறுதியில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்தும், 3-வது இடம் பிடித்த பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டியையும், அரையிறுதியில் எப்.சி. கோவா அணியையும் தோற்கடித்து இறுதி சுற்றை எட்டின.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறது.

1 More update

Next Story