ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி: பெங்களூருவை வீழ்த்தி மோகன் பகான் அணி சாம்பியன்


ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி: பெங்களூருவை வீழ்த்தி மோகன் பகான் அணி சாம்பியன்
x

சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கொல்கத்தா,

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி தொடங்கியது. 13 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்களான மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்பேட்டிக்குள் கால்பதித்தன. இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

பரபரப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது 96-வது நிமிடத்தில் மோகன் பகான் அணி வீரர் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

1 More update

Next Story