கால்பந்து தரவரிசை: சரிவை சந்தித்த இந்திய அணி

கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணியின் மோசமான தரநிலை இதுவாகும்
புதுடெல்லி,
சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 6 இடம் சரிந்து 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணியின் மோசமான தரநிலை இதுவாகும். கடந்த மாதம் தாய்லாந்துக்கு எதிராக நடந்த சர்வதேச நட்புறவு ஆட்டத்திலும், ஆசிய கோப்பை தகுதி சுற்றில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்திலும் அடைந்த தோல்வியால் இந்தியா இந்த சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன்பு மோசமான தரநிலையாக 2016-ம் ஆண்டில் 135-வது இடத்தில் இருந்தது.
உலக சாம்பியன் அர்ஜென்டினா முதலிடத்திலும், ஸ்பெயின் 2-வது இடத்திலும், பிரான்ஸ் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், பிரேசில் 5-வது இடத்திலும் தொடருகின்றன.
Related Tags :
Next Story