கால்பந்து காட்சி போட்டி: இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி

image courtesy:twitter/@Udhaystalin
ஆல் ஸ்டார் இந்தியா - பிரேசில் ஜாம்பவான் அணிகளுக்கு இடையே சிறப்பு கால்பந்து காட்சி போட்டி நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய முன்னாள் வீரர்களை கொண்ட ஆல்-ஸ்டார் இந்திய அணியுடன், 2002-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி காட்சி போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டி நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் பிரேசில் ஜாம்பவான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆல்-ஸ்டார் இந்தியாவை தோற்கடித்தது. பிரேசில் தரப்பில் வயோலா மற்றும் ரிக்கார்டோ ஒலிவியரா தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா தரப்பில் பிபியானோ பெர்னாண்டஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
பல முன்னாள் வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தனர்.
Related Tags :
Next Story