கிளப் உலகக்கோப்பை கால்பந்து: ரியல் மாட்ரிட், டார்ட்முன்ட் அணிகள் காலிறுதிக்கு தகுதி

image courtesy:twitter/@realmadriden
இந்த தொடரின் காலிறுதி சுற்று நாளை தொடங்குகிறது.
மியாமி கார்டன்ஸ்,
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று (இந்திய நேரப்படி) நடைபெற்ற நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் - ஜுவென்டஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் யுவென்டசை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட் தரப்பில் கோன்ஜாலோ கார்சியா கோல் அடித்து அசத்தினார்.
இதில் நடைபெற்ற நாக் - அவுட் மற்றொரு ஆட்டத்தில் டார்ட்முன்ட் - மான்டெர்ரி அணிகள் மோதின. இதில் டார்ட்முன்ட் 2-1 என்ற கோல் கணக்கில் மான்டெர்ரியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதியில் ரியல் மாட்ரிட் - டார்ட்முன்ட் அணிகள் நேருக்கு நேர் சந்திக்கின்றன. இந்த தொடரின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்க உள்ளன.