மத்திய ஆசிய மண்டல கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்தியா- தஜிகிஸ்தான் மோதல்


மத்திய ஆசிய மண்டல கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்தியா- தஜிகிஸ்தான் மோதல்
x
தினத்தந்தி 31 July 2025 4:00 AM IST (Updated: 31 July 2025 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்

புதுடெல்லி,

மத்திய ஆசிய கால்பந்து சங்கம் சார்பில் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் ஆகஸ்டு 29-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஓமன் அணிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 29-ந் தேதி தஜிகிஸ்தானையும், அடுத்த ஆட்டங்களில் செப்டம்பர் 1-ந் தேதி ஈரானையும், செப்டம்பர் 4-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது

1 More update

Next Story