உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு கேப்வெர்டே தகுதி


உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு கேப்வெர்டே தகுதி
x

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.

அக்ரா,

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். தகுதி சுற்று போட்டி கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.

இதில் ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் கானா தலைநகர் அக்ராவில் நடந்த ஆட்டத்தில் கேப்வெர்டே அணி எஸ்வதினியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் குரூப் டி பிரிவில் 23 புள்ளிகளை பெற்று அந்த அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது. இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக கேமரூன் அணி தகுதி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.

கேப்வெர்டே அணி முதல் முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இதுவரை 6 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தகது.

1 More update

Next Story