ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா 'சாம்பியன்'

Image : @FCBarcelona
இறுதி ஆட்டம் ஸ்பெயினின் செவில்லி நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
செவில்லி,
கோபா டெல் ரே எனப்படும் ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் ஸ்பெயினின் செவில்லி நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முன்னாள் சாம்பியன்களான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் ஆகிய கிளப் அணிகள் மல்லுக்கட்டின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை நீடித்ததால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் பார்சிலோனா வீரர் ஜூல்ஸ் கவுண்டே 116-வது நிமிடத்தில் கோல் போட்டார்.முடிவில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை தோற்கடித்து 32-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.
Related Tags :
Next Story