ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று - இந்தியா தோல்வி


ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று - இந்தியா தோல்வி
x

கடைசி நிமிடத்தில் ஹாங்காங் கோல் போட்டு வெற்றிக்கனியை பறித்தது.

கவுலூன்.

2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதிய ஆட்டம் ஹாங்காங்கில் உள்ள கவுலூன் நகரில் நேற்றிரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் ஹாங்காங் கோல் போட்டு வெற்றிக்கனியை பறித்தது.

அதாவது இந்திய கோல்கீப்பர் விஷால் காய்த் கோல் எல்லைக்கு வெளியே வந்து பந்தை பிடிக்க முயற்சித்த போது, ஹாங்காங் வீரர் மைக்கேல் உதேபுஷோரை இடித்து விட்டார். இதனால் நடுவர் ஹாங்காங் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். இதனை பயன்படுத்தி ஹாங்காங் வீரர் ஸ்டீபன் பெரேரா கோலடித்தார். முடிவில் 153-ம் நிலை அணியான ஹாங்காங் 1-0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 127-வது இடம் வகிக்கும் இந்தியாவை வீழ்த்தியது.

1 More update

Next Story