அடுத்த ஆண்டு கேரளாவிற்கு வருகை தரும் அர்ஜென்டினா கால்பந்து அணி


அடுத்த ஆண்டு கேரளாவிற்கு வருகை தரும் அர்ஜென்டினா கால்பந்து அணி
x

கோப்புப்படம் 

அர்ஜென்டினா கால்பந்து அணி மார்ச் 2026 இல் கேரளாவுக்கு வருகை தருகிறது.

புதுடெல்லி,

நடப்பு உலக சாம்பியனான லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த மாதம் கேரளா வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பயணத்தின் போது அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி கொச்சியில் வரும் 17-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேரளா வருகை திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த தகவலை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனமும், இந்த போட்டியை ஏற்பாடு செய்து வரும் நிறுவனமும் தெரிவித்தன.

இது குறித்து இந்த போட்டியை ஏற்பாடு செய்து வரும் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘சர்வதேச கால்பந்து சங்கத்திடம் (பிபா) இருந்து போட்டிக்கான ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்துடன் கலந்து ஆலோசித்ததில் கொச்சியில் நவம்பரில் நடக்க இருந்த நட்புறவு கால்பந்து போட்டியை தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவிற்கு வருகை தந்து ஒரு போட்டியில் விளையாடும் என்று கேரள விளையாட்டு மந்திரி வி. அப்துர் ரஹ்மான் கூறியுள்ளார்.

கேரள அரசின் ஸ்போர்ட்ஸ் விஷன் 2031 நிகழ்வு தொடர்பான விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது, இரண்டு நாட்களுக்கு முன்பு, அர்ஜென்டினா அணியிடமிருந்து மார்ச் மாதம் வருவதை உறுதிப்படுத்தும் ஒரு மின்னஞ்சல் எங்களுக்கு வந்தது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர்கள்குறிப்பிட்டனர். அணியின் வருகைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story