இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
பெக்கன்ஹாம்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:
இந்தியா: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா,மவுல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு, ஆர்எஸ் அம்ப்ரிஷ், முகமது எனான், தீபேஷ் தேவேந்திரன், ஹெனில் படேல், அன்மோல்ஜீத் சிங்
இங்கிலாந்து: ஜெய்தன் டென்லி, ஆர்ச்சி வாகன், ஹம்சா ஷேக் (கேப்டன்), ராக்கி பிளின்டாப், பென் மேயஸ், தாமஸ் ரியூ, ஏகான்ஷ் சிங், ரால்பி ஆல்பர்ட், ஜாக் ஹோம், ஜேம்ஸ் மின்டோ, அலெக்ஸ் கிரீன்