இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: மலேசியாவுடன் இன்று மோதல்; ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைக்கும் இந்தியா


இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:  மலேசியாவுடன் இன்று மோதல்; ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைக்கும் இந்தியா
x
தினத்தந்தி 16 Dec 2025 3:08 AM IST (Updated: 16 Dec 2025 3:21 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள், ஏ பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மோதுகின்றன.

துபாய்,

8 அணிகள் இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி, மலேசியாவை (காலை 10.30 மணி) சந்திக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்துள்ளது. அதே சமயம் முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய மலேசியா ஆறுதல் வெற்றிக்காக முயற்சிக்கும்.

இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. தலா ஒரு வெற்றி, தோல்வி கண்டுள்ள இவ்விரு அணிகளில் வெற்றி பெறும் அணி அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதற்கிடையே ‘பி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 236 ரன் இலக்கை இலங்கை 49.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை பந்தாடி 2-வது வெற்றியை பெற்றது. இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் இலங்கை, வங்காளதேசம் அரைஇறுதியை உறுதி செய்தன.

1 More update

Next Story