மகளிர் டி20 கிரிக்கெட்: கடைசி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

image courtesy: @englandcricket
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
பர்மிங்காம்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற 4 டி20 ஆட்டங்களில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பர்மிங்காமில் இன்று நடக்கிறது.இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தொடர இந்திய அணி போராடும். அதேவேளையில் ஆறுதல் வெறிக்காக இங்கிலாந்து முயற்சி செய்யும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11.05 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story