மகளிர் கிரிக்கெட்: அயலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்- தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து இடையே தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற உள்ளது.
கேப்டவுன்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் டி20 தொடரும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் டி20 போட்டி டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லாரா வால்வார்ட் தலைமையிலான அந்த அணியில் ஓய்விலிருந்து திரும்பிய முன்னாள் கேப்டன் டேன் வான் நீகெர்க் இடம்பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்:
டி20 அணி: லாரா வால்வார்ட் (கேப்டன்), நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, மரிசான் கப், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ்,கராபோ மெசோ, நோன்குலுலேகோ ம்லாபா, செஷ்னி நாயுடு, நோண்டுமிசோ ஷாங்காஸ், க்ளோ ட்ரையன், பே டன்னிக்லிப், டேன் வான் நீகெர்க்.
ஒருநாள் அணி: லாரா வால்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், லாரா குடால், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜாப்டா, லியா ஜோன்ஸ், சுனே லூஸ், எலிஸ்-மாரி மார்க்ஸ், கராபோ மெசோ, நோன்குலுலேகோ ம்லாபா, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, மியான் ஸ்மிட், பே டன்னிக்லிப், டேன் வான் நீகெர்க்.






