ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரஜத் படிதார் விளையாடுவாரா ? பயிற்சியாளர் விளக்கம்


ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரஜத் படிதார் விளையாடுவாரா ? பயிற்சியாளர் விளக்கம்
x

65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியானது .இந்த தகவலுக்கு பெங்களூரு அணியின் பயிற்சியாளர் பிளோயர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

ரஜத் படிதாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.ஆனால் அவர் தற்போது விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருக்கிறார். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story