விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணி அறிவிப்பு.. இந்திய கேப்டனுக்கு இடம்

image courtesy:PTI
இந்த தொடரில் பல இந்திய முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
மும்பை,
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நாளை முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். அத்துடன் அந்த அணியில் அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதில் சுப்மன் கில் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் இரண்டு அல்லது 3 ஆட்டங்களில் ஆடுவார்கள் என்று தெரிகிறது. அபிஷேக் ஷர்மா அதிக ஆட்டங்களில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது. எனினும் பஞ்சாப் அணிக்கு இன்னும் கேப்டன் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணி விவரம்: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்னூர் பண்ணு, அன்மோல்ப்ரீத் சிங், உதய் சஹாரன், நமன் திர், சலில் அரோரா, சன்விர் சிங், ரமன்தீப் சிங், ஜஷன்ப்ரீத் சிங், குர்னூர் பிரார், ஹர்ப்ரீத் பிரார், ரகு ஷர்மா, கிரிஷ் பகத், கவுரவ் சவுத்ரி, சுக்தீப் பஜ்வா.






