பும்ராவின் சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி

ஜஸ்பிரித் பும்ரா 783 புள்ளிகள் எடுத்ததே இந்திய பவுலரின் அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 811 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி 2-வது இடத்தில் (699 புள்ளி) இருக்கிறார். கடந்த செம்டம்பர் மாதம் அரியணையில் ஏறிய தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி, நிலையான செயல்பாட்டால் ‘நம்பர் ஒன்’ இடத்தில் தொடருகிறார். அத்துடன் இந்திய பவுலர்களில் அதிக புள்ளிகள் குவித்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா 2017-ம் ஆண்டில் 783 புள்ளிகள் எடுத்ததே இந்திய பவுலரின் அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது. அவரை வருண் சக்ரவர்த்தி முந்தியுள்ளார்.
Related Tags :
Next Story






