முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு


முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு
x

image courtesy:twitter/@OfficialSLC

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:

இலங்கை: பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமில் மிஸ்ரா, குசல் பெரேரா, தசுன் ஷனகா (கேப்டன்), ஜனித் லியானகே, கமிந்து மெண்டிஸ், ஹசரங்கா, சமீரா, எஷன் மலிங்கா, விஜயகாந்த் வியாஸ்காந்த்.

பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான், பாபர் அசாம், சல்மான் ஆகா (கேப்டன்), பகார் ஜமான், உஸ்மான் கான், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், முகமது வாசிம் ஜூனியர், சல்மான் மிர்சா, அப்ரார் அகமது

1 More update

Next Story