முத்தரப்பு டி20 தொடர்: கடைசி லீக் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி


முத்தரப்பு டி20 தொடர்: கடைசி லீக் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி
x

image courtesy:ICC

இந்த தொடரில் யுஏஇ அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஜா,

ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் நேற்று நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இப்ராகிம் சத்ரன் 48 ரன்கள் அடித்தார்.

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணி கடைசி வரை போராடி பார்த்தது. இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணியால் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

லீக் சுற்று முடிவில் தலா 3 வெற்றிகள் பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஒரு வெற்றி கூட பெறாத யுஏஇ அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

1 More update

Next Story