டெஸ்ட் கிரிக்கெட்: உலக சாதனை படைத்த மார்க்ரம்


டெஸ்ட் கிரிக்கெட்: உலக சாதனை படைத்த மார்க்ரம்
x

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மார்க்ரம் இந்த சாதனையை படைத்தார்.

கவுகாத்தி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 489 ரன்களும், இந்தியா 201 ரன்களும் எடுத்தன.

பின்னர் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 63.5 ஓவர்களில் 140 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 9 கேட்சுகளை பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை மார்க்ரம் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய வீரர் ரகானே ஒரு போட்டியில் 8 கேட்சுகள் பிடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள மார்க்ரம் புதிய சாதனை படைத்துள்ளார்.

1 More update

Next Story