டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து மண்ணில் 3-வது இந்திய வீரராக வித்தியாசமான சாதனை படைத்த கே.எல்.ராகுல்

நடப்பு இங்கிலாந்து தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை 1,038 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 2 ரன்களிலும், கே.எல். ராகுல் 14 ரன்களிலும் (40 பந்துகள்) ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இந்தியா 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அதனால் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மழை கொட்டியதால் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது கேப்டன் சுப்மன் கில் (21 ரன், 35 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். தொடர்ந்தது. சாய் சுதர்சன் 38 ரன்களில் (108 பந்து, 6 பவுண்டரி) விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்திடம் சிக்கினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (9 ரன்), துருவ் ஜூரெல் (19 ரன்) நிலைக்கவில்லை.
தொடர்ந்து கருண் நாயர் , வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து விளையாடினர் . சிறப்பாக விளையாடிய கருண் நாயர் அரைசதமடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது .கருண் நாயர் 52 ரன்களும் , வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த இன்னிங்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆன கே.எல்.ராகுல் 40 பந்துகளை எதிர்கொண்டார். இதனையும் சேர்த்து நடப்பு தொடரில் இதுவரை 1,038 பந்துகளை அவர் எதிர்கொண்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 1000+ பந்துகளை எதிர்கொண்ட மூன்றாவது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற வித்தியாசமான சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சுனில் கவாஸ்கர் - 1,199 பந்துகள்
2. முரளி விஜய் - 1,054 பந்துகள்
3.கே.எல்.ராகுல் - 1,038 பந்துகள்