டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான ஆட்டம் நாளை தொடக்கம்


டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான ஆட்டம் நாளை தொடக்கம்
x

image courtesy:PTI

இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

லக்னோ,

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.

டெஸ்ட் போட்டிகள் லக்னோவிலும், ஒருநாள் போட்டிகள் கான்பூரிலும் நடக்கின்றன. இந்நிலையில், இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் சாய் சுதர்சன், நாராயன் ஜெகதீசன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், நிதிஷ்குமார் ரெட்டி உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய ஏ அணி ஜாக் எட்வர்ட்ஸ் தலைமையில் களம் காண்கிறது.

1 More update

Next Story