டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த கிராவ்லி - பென் டக்கெட் ஜோடி


டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த கிராவ்லி - பென் டக்கெட் ஜோடி
x

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டனர். இதனால் ரன் ரேட் வேகமாக நகர்ந்தது.

வெறும் 7 ஓவர்களில் இந்த கூட்டணி இங்கிலாந்து அணியை 50 ரன்களை கடக்க வைத்தது. டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஜாக் கிராவ்லி ஜோடி இந்தியாவுக்கு எதிராக 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பது இது 8-வது முறையாகும்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 50+ ரன்கள் அடித்த இங்கிலாந்து தொடக்க ஜோடி என்ற மாபெரும் சாதனையை பென் டக்கெட் - ஜாக் கிராவ்லி படைத்துள்ளனர். இதற்கு முன்னர் குக் - ஸ்டிராஸ் ஜோடி 7 முறை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள டக்கெட் - ஜாக் கிராவ்லி கூட்டணி புதிய சாதனை படைத்துள்ளது.

ஒட்டு மொத்தத்தில் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக முறை 50+ ரன்கள் அடித்த தொடக்க ஜோடிகளின் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீசின் கோர்டன் கிரீனிட்ஜ் & டெஸ்மண்ட் ஹேய்ன்ஸ் கூட்டணியை (8 முறை) பென் டக்கெட் - ஜாக் கிராவ்லி ஜோடி சமன் செய்துள்ளது.

1 More update

Next Story