டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலிய உத்தேச கிரிக்கெட் அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக அறிவிப்பு


டி20 உலக கோப்பை:  ஆஸ்திரேலிய உத்தேச கிரிக்கெட் அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக அறிவிப்பு
x

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெல்போர்ன்,

2026-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, 15 பேர் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இன்று அறிவித்து உள்ளது.

இந்த அணிக்கு கேப்டனாக, ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் செயல்படுவார். சமீபத்திய டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடாத நட்சத்திர வீரர்களான பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன் மற்றும் கூப்பர் கன்னோலி ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கன்னோலி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குன்னேமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், லெக்-ஸ்பின்னராக ஆடம் ஜம்பா திறம்பட பந்து வீசுவார். அவருடன், மேத்யூ குன்னேமன், கூப்பர் கன்னோலி மற்றும் ஆல்-ரவுண்டர்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோரும் எதிரணிக்கு அதிர்ச்சி தரும் வகையில் பந்து வீசுவார்கள்.

இந்தியா மற்றும் இலங்கையின் நிலைமையை எதிர்கொள்ள கூடிய வீரர்களை கவனத்தில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது என தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறினார். எனினும், தகுதியின் அடிப்படையிலேயே பல வீரர்கள் அணியில் இடம் பெற்றிருக்கின்றனர் என அவர் கூறினார்.

1 More update

Next Story