டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியில் இணையும் மலிங்கா


டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியில் இணையும் மலிங்கா
x

டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

கொழும்பு,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை ,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு, அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உதவியை இலங்கை கிரிக்கெட் வாரியம் நாடியுள்ளது. அவரை குறுகிய கால அடிப்படையில் இலங்கை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது.

1 More update

Next Story